வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாட்டுக்கு நாகேஷுடன் டான்ஸ் ஆடிய வாலியின் மனைவி - என்ன பாட்டு தெரியுமா?

First Published | Nov 29, 2024, 11:43 AM IST

Lyricist Vaali Wife Dance With Nagesh : பாடலாசிரியர் வாலி எழுதிய பிளாக்பஸ்டர் ஹிட் பாடலுக்கு அவரின் மனைவி நாகேஷ் உடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கிறார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

Lyricist Vaali Wife Ramani Thilagam

தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் வகையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேல் பாடல் எழுதினாலும் தன்னுடைய கடைசி காலம் வரை இளமை மாறாது பல பாடல்களை கொடுத்ததால் இன்றுவரை வாலிப கவிஞராகவே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். வாலி மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு ரசிகர்கள் இன்றளவும் வைப் செய்து தான் வருகிறார்கள்.

lyricist Vaali

கவிஞர் வாலிக்கு கடந்த 1965-ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்துக்கு முன்னர் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதியது தான் வாலிக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதிலும் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... வறுமையில் இருந்த வாலி; நாகேஷ் வாங்கி கொடுத்த பேப்பரால் லட்சாதிபதி ஆன கதை தெரியுமா?

Tap to resize

Nagesh, Vaali

இந்தப் பாடலின் வரிகளால் இம்பிரஸ் ஆன பெண் ஒருவர் வாலியின் ரசிகையாக மாறினார். அந்தப் பெண் வாலிக்கு தினமும் கடிதம் எழுதி வந்ததோடு, அவரை ஒரு நாள் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். தினமும் கடிதம் எழுதும் அளவுக்கு நமக்கு இப்படி ஒரு ரசிகையா என வியந்துபோன வாலி ஒருநாள் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி இருக்கிறார். இந்த சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே ஒரு கிரஷ் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

Vaali Wife Dance With Nagesh

ஒரு கட்டத்தில் அந்த ரசிகையையே திருமணம் செய்துகொண்டார் வாலி. அவர் தான் ரமணி திலகம். வாலியின் மனைவி நடிகரும், வாலியின் நெருங்கிய நண்பருமான நாகேஷ் உடன் ஒரு பாடலில் டான்ஸ் ஆடி உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா... அது தான் நிஜம். வாலியை கரம்பிடிக்கும் முன் சினிமாவில் சைடு டான்ஸராக இருந்த ரமணி திலகம், நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெற்ற ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் நாகேஷ் உடன் நடனமாடி இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் பாடலை எழுதியது கவிஞர் வாலி தான். அப்பாடல் உருவானபோது வாலி பேச்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி; இருவர் குரலோடு விளையாடிய பாலசந்தர் - துணை நின்ற வாலி!

Latest Videos

click me!