Breakdown Remake Vidaamuyarchi
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. ஓம் பிரகாஷ் இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
vidaamuyarchi
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கி உள்ளனர். இப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த படக்குழு நேற்று இரவு 11.08 மணிக்கு சர்ப்ரைஸாக அப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. படத்தின் டீசரை பார்த்த ரசிகர்களுக்கு அதில் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. அதில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதை பார்த்து பிரம்மித்துப்போயினர்.
Vidaamuyarchi Ajith
அதுமட்டுமின்றி அனிருத்தின் பின்னணி இசையும் வேறலெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். டீசர் மட்டுமின்றி விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நேற்றே அறிவித்துவிட்டது. அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தல பொங்கல் தான் என அஜித் ரசிகர்கள் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி உடன் பொங்கல் ரேஸில் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?
Vidaamuyarchi Movie Story
விடாமுயற்சி டீசர் மூலம், இது ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதும் உறுதியாகி உள்ளது. ஹாலிவுட்டில் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் கதைப்படி, ஹீரோ தன் மனைவி உடன் ஜோடியாக அஜர்பைஜான் நாட்டுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு காரில் பயணம் செய்யும் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு காரில் பிரச்சனை ஆகிறது.
Vidaamuyarchi Pongal Release
அது ஆள்நடமாட்டமே இல்லாத பகுதி என்பதால், அப்போது அந்த வழியே செல்லும் டிரக்கில் மனைவியை ஏற்றிவிடும் ஹீரோ, நகர பகுதியில் உள்ள ஒரு கஃபேவில் வெயிட் பண்ணுமாரு சொல்லி அனுப்பி வைக்கிறார். காரை சரிசெய்துவிட்டு அந்த கஃபேவுக்கு சென்று ஹீரோ பார்க்கும்போது அங்கு மனைவியை காணவில்லை. பின்னர் தன் மனைவியை தேட ஆரம்பிக்கும் ஹீரோ அவரை கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை. இது 27 ஆண்டுகளுக்கு முன் வந்த படமாக இருந்தாலும் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து மகிழ் திருமேனி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... "தெறிக்கவிடலாமா"; பல நாள் காத்திருப்பு - தல ரசிகர்களுக்கு விருந்தான விடாமுயற்சி டீசர் இதோ!