நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமண கொண்டாட்டங்கள் குடும்ப வழக்கத்தின் படி ஹல்தி நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி உள்ளது. இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாக சைத்தாயா, நடிகை சமந்தாவை 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், 2022-ஆம் ஆண்டு முதல் 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து, இருவருக்கும் டிசம்பர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
25
Naga Chaitanya Wedding on December 5th
நாகசைதன்யா - சோபிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருமே திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த விரும்பாத நிலையில், இது ஒரு பிரைவேட் நிகழ்வாகவே நடைபெற உள்ளது. மேலும் தங்களின் திருமண வேலைகள் அனைத்தையுமே சோபிதா மற்றும் நாக சைதன்யா தான் அதிகம் சிரத்தி எடுத்து செய்துள்ளனர்.
இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது ஹல்தி நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளதை தொடர்ந்து இது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் சோபிதா, சைதன்யாவுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி புதுமண தம்பதிகளின் இனிமையான வாழ்க்கை மங்களகரமாக அமைய வாழ்த்தியுள்ளனர். சோபிதா வெட்கத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார்.
45
Naga Chaitanya Wedding Preparations
ஹல்தி நிகழ்ச்சிக்கு பின்னர் சோபிதா நலங்கு நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காணப்பட்டார். நாக சைதன்யா எளிமையாக குர்தா பைஜாமா அணிந்து காணப்பட்டார். இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரியப்படி மணமக்களுக்கு மங்கல ஸ்நானம் செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீதும் மலர் மழை பொழிந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. சைதன்யாவின் விருப்பப்படி திருமணம் எளிமையாக நடத்தப்படும் என்று நாகார்ஜுனா அறிவித்தார். ஆனால் பார்க்கும்போது திருமணம் எளிமையாக இல்லாமல் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்பது தெரிகிறது.
சைதன்யா சோபிதா திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திரைப்பட மற்றும் அரசியல் பிரமுகர்கள் என மொத்தம் 300 பேர் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். சைதன்யாவுடனான திருமணத்திற்காக சோபிதாவின் முழுப் பெயரையும் லட்சுமி சோபிதா என்று மாற்றியதாகவும் தகவல்கள் வருகின்றன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சோபிதா அக்கினேனி குடும்பத்தில் நன்றாகப் பழகிவிட்டார். ஒவ்வொரு நிகழ்விலும் குடும்ப உறுப்பினர்களுடன் காணப்படுகிறார். அக்கினேனி தேசிய விருதுகள் நிகழ்வில், ஐஎஃப்எஃப்ஐ நிகழ்வில் சோபிதா அக்கினேனி குடும்பத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.