வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்த பின் மரணத்தையும் வென்று, மக்கள் மனதில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கின்றனர். அப்படி உலா வந்துகொண்டிருக்கின்ற உன்னத கவிஞன் தான் கண்ணதாசன். காலம்கடந்தும் மறக்க முடியாத பல பாடல்களைக் கொடுத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கண்ணதாசனின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. சாத்தப்பனார் - விசாலாட்சி தம்பதிக்கு 8-வது பிள்ளையாக பிறந்தார் கண்ணதாசன். தன் திறமையை வளர்த்துக்கொள்ள திரைப்படங்கள் தான் சிறந்தது என முடிவு செய்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளை தேடிப் போனார்.