தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணிக் காகிதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் இணைந்துள்ளார். இது குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது.
குறுகிய காலகட்டத்தில் டாப் டென் நாயகிகளில் முக்கியமானவராக மாறிவிட்ட கீர்த்தி சுரேஷ், பாலிவுட், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் முன்னணியில் உள்ளார்.
keerthy suresh
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு கீர்த்தியின் முந்தைய வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது.
keerthy suresh
குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகத்திற்கு என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷை அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் அட்லீ அவரது மனைவி பிரியாவும் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
அட்லீ தற்போது ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிறார்.