Keerthy Suresh
குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று பல விருதுகளையும் குவித்துள்ள கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று 1992 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 30 வயதாகிறது. இந்நாளில் நம்ம ஊர் நாயகியை கொண்டாடும் சில பதிவுகளை இங்கு காணலாம்.
keerthy suresh
தென்னிந்திய சினிமாவுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். 2000 களின் பிற்பகுதிகள் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். மலையாள பைங்கிளி ஆன இவர் பிரபல தயாரிப்பாளரின் மகளாவார்.
keerthy suresh
தனது தந்தை மலையாள வம்சாவழியை சேர்ந்தவர் என்பதால் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ரேவதி என்கிற சகோதரி உள்ளார். டிசைனிங் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீர்த்தி சுரேஷ் இரண்டாயிரத்தில் வெளியான பைலட்ஸ் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
keerthy suresh
தொடர்ந்து அச்சநேயனெனிக்கிஷ்டம், குபேரன் உள்ளிட்ட மலையாள படங்களில் தோன்றியிருந்தார். மூன்று மலையாள படங்களில் சிறுவயது பெண்ணாக நடித்த இவர் கீதாஞ்சலி மூலம் நாயகியாக அறிமுகமானார். இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
பின்னர் ரிங் மாஸ்டர் படத்திலும் நாயகியாக தோன்றியவர், இது என்ன மாயம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு பக்கமே திரும்பிய கீர்த்தி அங்கு மூன்று படங்களில் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பிய இவர் கார்த்திகா தேவியாக தமிழக ரசிகர்களின் மனதில் ஆணிவேர் போல் பதிந்து விட்டார்.
Keerthy Suresh
எல்லாவற்றிற்கும் மேலாக தெலுங்கில் இவர் நடித்த மகாநதி படம் தென்னிந்திய சினிமா உலகையே இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகையர் திலகம் சாவித்திரி தேவி வேடத்தில் இவர் வாழ்ந்து காட்டி தேசிய விருதை கைப்பற்றினார்.
பின்னர் விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் தியாவாக நடித்திருந்தார். தொடர்ந்து சண்டைக்கோழி 2 வில் கிராமத்து துருதுரு பெண்ணாக வந்து முந்தைய பாக நாயகியை நினைவிற்கு கொண்டு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து விஜயின் சர்க்கார் உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசைக்க முடியாத இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
முன்னணி நாயகி ஆனதால் தனது பாணியை மாற்றிக்கொள்ள எண்ணிய இவர் தனக்கான கதைக்களத்தை தேட ஆரம்பித்தார். அதன்படி வித்தியாசமான திரில்லர் கதையான பெண்குயின் பின்னர் மிஸ் இந்தியா போன்ற ஓடிடியில் வெளியான படங்களில் நடித்திருந்தார். இவை ஆன்லைனில் ஒளிபரப்பானதாலோ என்னவோ சரியான வரவேற்பை பெறவில்லை.
keerthy suresh
அரபிக் கடலின் சிங்கம், குட்லக் சகியை தொடர்ந்து மீண்டும் திரில்லர் நாயகியாக சாணிக் காகிதம் பின்னர் சர்க்காரு வாரி பாடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் படத்தில் மாஸ் நாயகியாக தோன்றி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் தெலுங்கில் இரண்டு படம் என தன் கைவசம் வைத்துள்ளார்.