கன்னடத் திரையுலகில் அடியெடுத்து வைத்த ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என பிஸியாக இருக்கிறார்.
தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வருடத்திற்கு மூன்றில் இருந்து நான்கு படங்களில் நடித்து வந்தார்.
நல்ல படங்களில் நடித்த போதிலும் தமிழில் இவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அயலான், இந்தியன் 2, பெண்கள் இரவு ஆகிய மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
32 வயதை வயதாகும் ரகுல் பிரீத் சிங் மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இவர் தனது அழகான கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு வண்ண உடையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வசிகரித்து வருகிறது.