அடி தூள்... ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்..?

Published : Jan 24, 2023, 07:29 PM ISTUpdated : Jan 24, 2023, 08:21 PM IST

சிறந்த நடிகராக ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில், 'ஆர் ஆர் ஆர்' படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் இடம் பிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15
அடி தூள்... ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்..?

95 ஆவது ஆஸ்கர் விருது விழாவிற்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியான நிலையில், இதில் சிறந்த நடிகராக ஜூனியர் என்டிஆர் நாமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்ந்து இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

25

இயக்குனர் ராஜமவுலி, சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின், நாட்டு பற்று மற்றும் நடிப்பை மையமாக வைத்து  இயக்கிய  திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்! மது பார்ட்டியில்... குடும்பத்தோடு நடிகருடன் என்ஜோய் செய்த போட்டோஸ்

35

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு,  உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இப்படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தன.

45

சமீபத்தில் ஆர் ஆர் ஆர்,  திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு ' சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய நிலையில், இதற்காக விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஆர் ஆர் ஆர் பட குழுவினர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

வாழ்க்கையின் அர்த்தத்தை கற்றுக் கொடுத்தாய்! மகள் பிறந்த நாளில் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு உருகிய சினேகா!

55

இதில் நடிகர் ராம்சரண் அணிந்திருந்த தனித்துவமான ஆடை டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வந்த இத்திரை திரைப்படம்,  6 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலில் சிறந்த நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் ஜூனியர் என் டிஆர் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்

click me!

Recommended Stories