Jailer 2 Update: 'ஜெயிலர் 2'- திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஷாருக் கான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வெறும் கௌரவ தோற்றமாக இல்லாமல், கதையின் முக்கிய திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இந்தியத் திரையுலகின் இமயமலை என்று கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் திரையுலகின் பாட்ஷா ஷாருக் கான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் ஒரே திரையில் தோன்றுவது என்பது பல கோடி ரசிகர்களின் நீண்ட கால கனவாகும். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தில் ஷாருக் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25
தோஸ்து மக்கா தோஸ்து
ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் வருகை திரையரங்குகளை அதிர வைத்தது போல, இரண்டாம் பாகத்தில் அந்த இடத்தை ஷாருக் கான் நிரப்ப உள்ளார். இப்படத்தில் அவர் வெறும் கௌரவத் தோற்றத்தில் மட்டும் நடிக்காமல், கதையின் திருப்புமுனைக்குக் காரணமான ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, படத்தில் முத்துவேல் பாண்டியனாக வரும் ரஜினிகாந்தின் நீண்ட கால நெருங்கிய நண்பராக ஷாருக் கானின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
35
வடக்கில் ஷாருக்கான.! தெற்கில் ரஜினி.!
முத்துவேல் பாண்டியனின் கடந்த கால வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு முக்கியமான பிணைப்பாகவும், இக்கட்டான சூழலில் அவருக்குத் துணை நிற்கும் 'மாஸ்' கதாபாத்திரமாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மற்ற மொழி நட்சத்திரங்களை இணைப்பது என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை. 'ஜெயிலர் 2' திரைப்படத்தை உண்மையான 'பான் - இந்தியா' திரைப்படமாக மாற்றும் நோக்கில் படக்குழு செயல்பட்டு வருகிறது.
வட இந்தியச் சந்தையில் ஷாருக் கானுக்கு இருக்கும் அசுரத்தனமான செல்வாக்கு, படத்திற்கு மிகப்பெரிய வசூல் ரீதியான பலத்தைத் தரும் என்பது படக்குழுவின் கணிப்பு. அனிருத்தின் அதிரடி இசையில், ரஜினியும் ஷாருக் கானும் ஒரே பிரேமில் தோன்றும் அந்தத் தருணம், இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த சினிமா அனுபவங்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
55
இணையும் இரு பெரும் தலைகள்.!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இரு பெரும் மாஸ்ஹீரோக்கள் இணைவது 'ஜெயிலர் 2' மீதான ஆர்வத்தை உலக அளவில் கொண்டு சென்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.