Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!

Published : Feb 01, 2026, 10:26 AM IST

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நடிகர் கதிர், 'செம்பருத்தி' தொடருக்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை வென்றுள்ளார். இந்த வெற்றிக்கு அவரது தற்போதைய சீரியல் மாமனார் சைவம் ரவி, போட்ட கமெண்ட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

PREV
14
தமிழ் குடும்பங்களின் ஃபேவரைட் மாப்பிள்ளை.!

சின்னத்திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் நடிகர் கதிர். தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரில் சரவணன் என்ற எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து குடும்பங்களின் ஃபேவரைட் மாப்பிள்ளையாக மாறியுள்ளார். இவருக்குத் தற்போது தமிழக அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
அரசு விருதை தட்டிச் சென்ற சரவணன்!

தமிழக அரசு சார்பில் 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 'செம்பருத்தி' தொடரில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை கதிர் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், தமிழக அரசுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

34
மாமனார் கொடுத்த கமெண்ட் - இதுதான் 'வேற லெவல்' ட்வீஸ்ட்!

கதிரின் இந்த வெற்றிக்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஆனால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் அவருக்கு மாமனாராக (தங்கமயிலின் தந்தை) நடிக்கும் சைவம் ரவி போட்ட கமெண்ட் தான். தற்போது சீரியலில் சரவணன் - தங்கமயில் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு, மயில் வீட்டை விட்டு வெளியேறியுள்ள சூழலில், நிஜ வாழ்க்கையிலும் மாமனாராகவே மாறி அவர் ஒரு கமெண்ட் செய்துள்ளார்:

44
"மாப்ள நீ ஜெயிச்சுட்ட.. மயிலை மறந்துடாத!"

"மாப்ள நீ ஜெயிச்சுட்ட.. மயிலை மறந்துடாத!" என்று அவர் பதிவிட்டுள்ளார். சீரியல் கதையோடு ஒன்றிய இந்த கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள், "விருது வாங்கிய நேரத்துலயும் மாப்பிள்ளைக்கு மாமனார் செக் வைக்கிறாரே!" என்றும், "நிஜமாவே சரவணன் - தங்கமயில் ஜோடி சேர்ந்துடுவாங்களோ?" என்றும் சமூக வலைதளங்களில் கிண்டலாகவும் ஆர்வத்துடனும் விவாதித்து வருகின்றனர்.நிஜத்தில் கிடைத்த விருதுக்கும், சீரியலில் நடக்கும் பிரிவிற்கும் இடையே மாமனார் கொடுத்த இந்த 'தூது' இப்போது இணையத்தில் செம வைரல்!

Read more Photos on
click me!

Recommended Stories