கடந்த 2025 ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசனில், சுமார் 24 போட்டியாளர்கள் தங்களின் இசைப் பயணத்தைத் தொடங்கினர். பல்வேறு சுற்றுகள், கடுமையான போட்டிகள் மற்றும் நடுவர்களின் கண்டிப்பான மதிப்பீடுகளுக்குப் பிறகு, தற்போது 7 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண், தர்ஷனா மற்றும் ஆப்ரகாம் ஆகியோரே அந்தப் பெருமைக்குரிய இறுதிப் போட்டியாளர்கள் ஆவர்.