டிவியில் பார்க்கும்போது அந்த பெண் மீது கோபம் தான் வந்தது! நைட் டைம்ல திகிலான இடத்தில் என்ன வேலை! இசையமைப்பாளர் கேள்வி!

Published : Nov 05, 2025, 12:24 PM IST

ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு இரவில் சென்றது அந்தப் பெண்ணின் தவறு என்றும், அவளைக் காப்பாற்ற முடியாதது அவளது ஆண் நண்பனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கை அழிந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

PREV
14
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் பல்வேறு கேள்விளை எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள பதிவில்: கோவை விமான நிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு. முதலில், அந்தப் பெண் தவறு.

24
இரவில் எப்படி ஒருவனுடன் செல்லலாம்?

இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்? பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?

34
அரைகுறை இன்பம்

இரண்டாவது, அந்தப் பையன் தவறு. அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா? அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை.

44
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது. இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள்.இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது. தவறான நண்பனைத் தவிர் என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories