சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, வித்யாவை அழைக்க சென்ற இடத்தில் அவருக்கு ஒரு ஆர்டர் கிடைக்கிறது. அது ரோகிணியின் உறவினராம். இதனால் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கிரிஷை பார்க்க வந்தபோது, அவரிடம் அப்பாவுக்கு திதி கொடுக்கும் விஷயம் பற்றி பேசுகிறார் லெட்சுமி. அப்பாவுக்கு நீ ஒரே பொண்ணு என்பதால் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என தன் அம்மா ஸ்ட்ரிக்ட் ஆன சொன்னதால், அதை செய்ய ஒத்துக் கொள்கிறார் ரோகிணி. தீபாவளி கொண்டாட மனோஜின் பாட்டி ஊருக்கு செல்லும் போது இந்த திதியை செய்ய வருவதாக சொல்கிறார். அவரின் தோழி மகேஸ்வரியும் நான் வருகிறேன். அதனால் எந்த பிரச்சனையும் உனக்கு வராது என ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ரோகிணிக்கு அடுத்த தலைவலி
பின்னர் மறுநாளும் கிரிஷை பார்க்க மகேஸ்வரி வீட்டுக்கு செல்லும் ரோகிணியிடம் அவரது அம்மா புது குண்டை தூக்கிப் போடுகிறார். அதன்படி இறந்துபோன உன்னுடைய முதல் கணவர் சேகரின் அண்ணன் சுப்ரமணி தன்னிடம் போன் போட்டு, தாங்களுக்கு கல்யாணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கல்யாணி (ரோகிணி) கர்ப்பமாக இருந்தபோது அவரை வீட்டை விட்டு விரட்டிய பாவத்தால் தான் தாங்கள் இந்த நிலைமையில் இருக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி எங்களுக்கு இருக்கிறது. அதனால் கல்யாணியை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார்களாம்.
34
போனில் திட்டிவிட்ட ரோகிணி
இதையடுத்து லட்சுமி, ரோகிணியின் போன் நம்பரை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதை அறிந்து டென்ஷன் ஆன ரோகிணி, லட்சுமியை திட்டிக் கொண்டிருக்க அந்த தம்பதியினர் அவருக்கு போன் போடுகிறார்கள். அவர்களிடம் உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவு எப்பவோ முடிஞ்சு போச்சு, இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க என சொல்கிறார் ரோகிணி. உன் புள்ளைக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு தான் நாங்க வந்திருக்கோம் என அந்த தம்பதி சொல்ல, அதற்கு ரோகிணி, தயவு செஞ்சு என்ன தேடி வராதீங்க என கறாராக சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார்.
பின்னர் அந்த தம்பதி தங்கி இருந்த அபார்ட்மெண்டுக்கு முத்துவை வித்யாவின் கணவர் அழைத்து வருகிறார். அந்த தம்பதி வித்யாவின் கணவருக்கு தூரத்து சொந்தமாம். இதையடுத்து வித்யாவிடம் தனியாக பேசும் அந்த பெண், தனக்கு குழந்தை இல்லாதது பற்றியும், தான் கல்யாணிக்கு செய்த துரோகம் பற்றியும் சொல்ல, யார் அந்த கல்யாணி என வித்யா கேட்டதும் ரோகிணியின் பழைய போட்டோவை எடுத்து காட்டுகிறார். இதைப்பார்த்து ஷாக் ஆன வித்யா, இந்த விஷயத்தை ரோகிணியிடம் சொல்வதோடு, ஒரு குண்டையும் தூக்கி போடுகிறார். அந்த தம்பதி அடுத்த ஐந்து நாட்கள் முத்துவின் காரில் தான் பயணம் செய்ய இருக்கிறார்கள். அப்போது உன்னைப் பற்றி முத்துவிடமும் அவர்கள் பேச வாய்ப்புள்ளதாக சொல்கிறார், இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.