தர்ஷன் - பார்கவியை பிரிக்க அன்புக்கரசி பார்க்கும் சகுனி வேலை... ஜனனி எடுத்த அதிரடி முடிவு - எதிர்நீச்சல் 2

Published : Nov 05, 2025, 08:53 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அன்புக்கரசியால் தர்ஷன் - பார்கவி இடையே அடிக்கடி பிரச்சனை வருவதால், அதைத் தடுக்க ஜனனி தடாலடி முடிவெடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தன்னிடம் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரம் எதுவும் இல்லாததை பற்றி மொட்டை மடியில் பேசிக் கொண்டிருந்ததை கரிகாலன் ஒட்டுக் கேட்டுவிடுவதோடு, இதை மாமாவிடம் சொல்கிறேன் என கீழே ஓடிச் செல்லும் போது படியில் வழுக்கி விழுந்து மயக்கமடைந்துவிடுகிறார். பின்னர் அவரை நந்தினி எழுப்பி விசாரித்த போது அவர் ஆதிரை பற்றி விசாரிக்க, அவன் கீழே விழுந்ததில் அவனுக்கு மண்டை குழம்பி, எல்லாத்தையும் மறந்துவிட்டான் என அனைவரும் நிம்மதி அடைகிறார்கள். ஆனால் இதன்பின்னர் தான் தரமான சம்பவம் காத்திருக்கிறது.

24
வீடியோ விவகாரத்தில் கிடைத்த க்ளூ

நந்தினி, ஜனனி ஆகியோரிடம் இருந்து எஸ்கேப் ஆவதற்காக தனக்கு மறதி வந்தது போல் நடித்துள்ள கரிகாலன், பின்னர் நைசாக ஞானத்திடம் சென்று, தான் மண்டை குழம்பியது போல் ஆக்டிங் போடுவதாக சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வந்ததும் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மறுபுறம் வீடியோ விவகாரத்தில் கொற்றவைக்கு முக்கிய க்ளூ ஒன்று கிடைத்திருப்பதால், அவர் இரு தினங்களில் அந்த வீடியோ நம் கைக்கு வந்துவிடும் என ஜனனியிடம் சொல்லி இருக்கிறார். இதனால் அந்த வீடியோ கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

34
அன்புக்கரசி செய்யும் சதி

தர்ஷன் - பார்கவியை பிரிக்க, காய் நகர்த்தி வரும் அன்புக்கரசி, பார்கவியை தனியாக அழைத்து பேசுகிறார். தர்ஷனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியனும்னா சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என கூறுகிறார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன பார்கவி, ஒழுங்கு மரியாதையா உன்னுடைய உள்ளடி வேலையெல்லாம் இதோட நிறுத்திக்கோ, இனி எனக்கும் தர்ஷனுக்கும் இடையில் வந்த அவ்வளவு தான் என வார்னிங் கொடுக்கிறார். பின்னர் மாடிக்கு சென்று ஜனனியிடம் அன்புக்கரசி தன்னிடம் பேசிய விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாக சொல்கிறார் பார்கவி.

44
ஜனனியின் புது பிளான்

அப்போது பேசும் ஜனனி, இந்த அன்புக்கரசியை கொண்டுவந்து இந்த வீட்டில் வச்சிருப்பது, நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தான். அதனால் தர்ஷன் - பார்கவி இருவரையும் இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைக்க பிளான் போடும் ஜனனி, தன்னுடைய பிரெண்ட்ஸ் நிறைய பேர் பெங்களூருவில் இருக்கிறார் நீங்க அங்க போயிட்டு வர்றீங்கள என கேட்கிறார். இந்த விஷயத்தையும் கீழே இருந்தபடி ஒட்டுக் கேட்கும் கரிகாலன், அதைப்பற்றி அன்புக்கரசியிடம் கூறுகிறார். இதனால் இனி வரும் எபிசோடுகளில் அடுக்கடுக்கான ட்விஸ்ட்கள் காத்திருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories