உலக சாதனை படைத்த விஜய் டிவி புகழின் மகள் ரிதன்யா... பிறந்த 11 மாதத்தில் இப்படி ஒரு ரெக்கார்டா?

Published : Nov 05, 2025, 09:52 AM IST

விஜய் டிவி பிரபலம் புகழின் மகள் ரிதன்யா, ஏற்கனவே டம்பெல்ஸ் தூக்கியதற்காக உலக சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கிறார்.

PREV
14
Vijay TV Pugazh Daughter Create world Record

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமான புகழுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சி தொடங்கிய 2019-ம் ஆண்டு புகழுக்கு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார். அது அவரது வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. குக் வித் கோமாளியில் அவர் செய்த காமெடிகள் பலருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்ததால், அந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

24
குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் புகழுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறிப்பாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார் புகழ். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. சினிமாவில் பிசியானாலும் தனக்கு வாழ்க்கை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மறக்காத புகழ், அதில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் புகழ் கோமாளியாக களமிறங்கி இருக்கிறார்.

34
புகழ் மகள் செய்த சாதனை

புகழுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2023-ம் ஆண்டு ரிதன்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. புகழின் மகள் ரிதன்யா தன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறு வயதிலேயே உலக சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு 2 கிலோ டம்பெல்ஸை அதிக நேரம் தூக்கிய குழந்தை என்கிற உலக சாதனையை ரிதன்யா படைத்திருந்தார். 17 விநாடிகள் தூக்கி அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

44
உலக சாதனை படைத்த ரிதன்யா

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கிறார் புகழின் மகள் ரிதன்யா. அதன்படி பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்கிற சாதனையையும் ரிதன்யா படைத்திருக்கிறார். இந்த சாதனையை படைத்ததன் மூலம் International Book of Records-ல் இடம்பிடித்து இருக்கிறார் ரிதன்யா. அவர் மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். இதை புகழ் பெருமையுடன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரிதன்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories