தொலைந்த ஹார்டுடிஸ்க் கிடச்சிருச்சா? லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தீயாய் பரவும் தகவல் உண்மையா?

Published : Aug 27, 2024, 12:27 PM ISTUpdated : Aug 27, 2024, 12:28 PM IST

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது அதன் உண்மை பின்னணியை பார்க்கலாம்.

PREV
15
தொலைந்த ஹார்டுடிஸ்க் கிடச்சிருச்சா? லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தீயாய் பரவும் தகவல் உண்மையா?
Lal Salaam

இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த தனுஷின் 3 படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இசையமைப்பாளர் அனிருத் அறிமுகமானது அப்படத்தின் மூலம் தான். 3 படம் ஓரளவு வரவேற்பை பெற்றதற்கு அதன் பாடல்களே காரணம்.

25
Lal Salaam Rajinikanth

3 படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அப்படமும் பெரியளவில் வரவேற்பை பெறாததால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியே இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்படி அவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் லால் சலாம்.

35
Lal Salaam poster

இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லால் சலாம் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே உல்டாவாக இருந்தது.

இதையும் படியுங்கள்... "நம்ம குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா இருப்பீங்க..” நாக சைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தா உருக்கம்..

45
Lal Salaam Director AIshwarya Rajinikanth

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. ரிலீசுக்கு பின்னர் அளித்த பேட்டியில், லால் சலாம் படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்து போன விஷயத்தை உளறினார் ஐஸ்வர்யா, அதனால் தான் படம் எதிர்பார்த்தபடி வரவில்லை எனவும் கூறினார். அவரின் இந்த பேச்சு அப்படத்தின் ஓடிடி ரிலீசுக்கு ஆப்பு வைத்தது. தொலைந்த ஹார்டு டிஸ்க் கொடுத்தால் தான் வெளியிடுவோம் என ஓடிடி தரப்பில் கூறப்பட்டதாம். அதனால் தான் அப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்பட்டது.

55
Lal Salaam Fake OTT release Poster

இந்நிலையில், லால் சலாம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் தொலைஞ்ச ஹார்டுடிஸ்க் கிடைச்சிருச்சா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் உண்மையில் லால் சலாம் ஓடிடி ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர் உண்மையானது இல்லையாம், அது ஒரு ஃபேன் மேடு போஸ்டராம். இதன்மூலம் லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போவதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் நீக்கம்... குடிச்சுட்டு வந்ததால் துரத்திவிடப்பட்டாரா பிஜிலி ரமேஷ்?

Read more Photos on
click me!

Recommended Stories