"நம்ம குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா இருப்பீங்க..” நாக சைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தா உருக்கம்..

Published : Aug 27, 2024, 12:18 PM IST

நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணத்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

PREV
16
 "நம்ம குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா இருப்பீங்க..” நாக சைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தா உருக்கம்..
Samantha

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா திரைவாழ்க்கையில் வெற்றிகரமான நடிகை வலம் வருகிறார். எனினும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. நடிகர் நாகாஜுனாவின் மகனும், பிரபல நடிகருமான நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

26
Samantha Naga Chaitanya

கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகள் மட்டுமே இந்த திருமண வாழ்க்கை நீடித்தது. 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

36
Samantha Naga Chaitanya

இந்த நிலையில் நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணத்தின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் கிறிஸ்தவ விழாவில் உறுதிமொழி எடுக்கின்றனர். க்யூட்டான அழகான வெள்ளை கவுன் அணிந்திருந்த சமந்தா நாக சைதன்யா குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.

46
Samantha Naga Chaitanya

அந்த பழைய வீடியோவில் “ உங்களால் தான், நான் மெதுவாகவும் உறுதியாகவும் எப்போதும் கனவு கண்டது போல் மாறுவதை உணர முடிகிறது. நான் அறிந்த மிகப் பெரிய மனிதர். நீங்கள் ஒரு நாள் நமது அழகான குழந்தைக்கு சரியான தந்தையாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நூறு ஜென்மங்கள் அல்லது நூறு உலகங்கள் எதுவாக இருந்தாலும் அதில் உங்களை தேந்தெடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

56
Naga Chaitanya Sobhita

சில நாட்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது. ஆகஸ்ட் 8-ம் தேதி நாக சைதன்யா வீட்டில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

66
Naga Chaitanya Sobhita

நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.  இதை தொடர்ந்து நாக சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்தம் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Read more Photos on
click me!

Recommended Stories