விஜே சித்து உடன் இணைந்து ஃபன் பண்றோம் என்கிற பிராங்க் நிகழ்ச்சி செய்ததன் மூலம் பேமஸ் ஆனவர் பிஜிலி ரமேஷ். அந்நிகழ்ச்சியில் இவர் பேசிய வசனங்கள் சில மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறியது. அந்நிகழ்ச்சி மூலம் பிஜிலி ரமேஷுக்கு சினிமாவில் நடிக்கவும் சான்ஸ் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியுடன் நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி, அமலா பாலின் ஆடை போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் பிஜிலி ரமேஷ்.
24
VJ Sidhu, Bijili ramesh
இதுதவிர குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு பேமஸ் ஆன பிஜிலி ரமேஷ், ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானதால், படிப்படியாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. ஒருகட்டத்தில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கை ஆனார் பிஜிலி ரமேஷ். பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், இன்று அதிகாலை மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு முன் யூடியூப் சேனலுக்கு கடைசியாக அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது : “முன்பெல்லாம் துறுதுறுனு ஓடுவேன். இப்போ நடக்கவே கஷ்டமா இருக்கு. என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் குடி தான். கல்யாணத்துக்கு முன்னாடியே நிறைய குடிப்பேன். அப்போ செஞ்சது இப்போ வேலையை காட்டுகிறது. இப்போ நான் குடியை விட்டு ஒருவருஷம் ஆகப்போகுது. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய யோக்கியன் கிடையாது. தயவு செஞ்சு குடிய மறந்துருங்க. இல்லேனா என்னமாதிரி ஆகிடுவீங்க.
44
Bijili ramesh last interview
நல்லா இருக்கும்போது 40 பிரெண்ட்ஸ் கூட தேடி வருவாங்க. நான் படுத்த படுக்கையா இருக்கேன் இதுவரைக்கும் எந்த பிரெண்டும் தேடி வரல. என்னுடைய உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு, வண்டி ஓடுற வரை ஓடும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. இந்த குதிரை எப்போ நிக்கும்னு தெரியாது. இருக்கும் வரை என் மனைவி, குழந்தைகளை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் சரி என கடைசியாக அவர் பேசிய எமோஷனல் வீடியோ வைரலாகி வருகிறது.