இங்குட்டு ரஜினி... அங்குட்டு அஜித்! நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் சூர்யா - கங்குவா ரிலீஸ் எப்போ?

First Published | Aug 27, 2024, 9:19 AM IST

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ந் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் நிலை பற்றி பார்க்கலாம்.

Suriya Kanguva

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது கங்குவா திரைப்படம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா உடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா உருவாகி உள்ளது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.

vettaiyan vs Kanguva

கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட 13 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இதுவாகும். இப்படத்தை அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில தினங்களிலேயே அப்படத்திற்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்.. கூலி படத்தில் ஒரு மரண மாஸ் கேமியோ - எந்த நடிகர் தெரியுமா?

Tap to resize

kanguva

ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆனால் வசூல் பாதிக்கும் என்பதால் தற்போது கங்குவா திரைப்படம் ஆயுதபூஜை ரேஸில் இருந்து பின்வாங்க போவதாக கூறப்படுகிறது. ஆயுத பூஜையை தொடர்ந்து அடுத்த பெரிய பண்டிகையான தீபாவளிக்கும் அப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை. ஏனெனில் ஏற்கனவே தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர் ஆகிய படங்கள் காத்திருக்கின்றன.

Vidaamuyarchi

அதனால் கங்குவா படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது நவம்பர் மாதமும் அப்படத்திற்கு ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கிறதாம். ஏனெனில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தை நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். வேட்டையன் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் விடாமுயற்சி படத்தையும் தயாரித்து உள்ளது. இதனால் நவம்பரிலும் கங்குவாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன், ஜோடி யார் தெரியுமா?

Latest Videos

click me!