விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து உள்ளது. தற்போது அதன் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருவது அதில் கோமாளிகளாக பங்கேற்று வருபவர்கள் தான்.
24
Bijili ramesh
முதல் சீசனில் இருந்து பல்வேறு குக்குகள் மாறியதைப் போல் புகழ், குரேஷி, சரத், தங்கதுரை போன்ற ஒருசில கோமாளிகளை தவிர நிறைய பேர் மாறி இருக்கிறார்கள். அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கோமாளியாக கலந்துகொண்டவர்களில் பிஜிலி ரமேஷும் ஒருவர். இவர் அந்த சீசனில் சில எபிசோடுகளுக்கு பின்னர் பாதியில் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கான காரணமும் அந்த நேரம் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் அவர் குடித்துவிட்டு செட்டுக்கு வந்ததால் தான் அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி பிஜிலி ரமேஷிடமே ஒரு பேட்டியில் ஓப்பனாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆரம்பத்தில் நான் குடித்தேன், அதன்பின்னர் குடியை நிறுத்திவிட்டேன் என கூறி இருக்கிறார். அவர் குடியை கைவிட்டதற்கு முக்கிய காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.
44
Bijili ramesh alcohol addiction
ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ், ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் குடி எவ்வளவு கொடியது என்பது பற்றி ரஜினிகாந்த் பேசியதை கேட்ட பின்னர் தான் குடியை அடியோடு விட்டுவிட்டதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் குடியை விட்டாலும், அதனால் அவருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனை இன்று அவரது உயிரையே பறித்திருக்கிறது. அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தற்போது அவருக்கு எமனாக அமைந்திருக்கிறது. அதனால் 45 வயதிலேயே மரணமடைந்துள்ளார் பிஜிலி.