'கைதி 2' படத்தில் அடுத்த ரோலக்ஸ் ரேஞ்சுக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோவா? பக்கா பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ் !

Published : Nov 22, 2022, 08:14 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அடுத்த ரோலெக்ஸ்சாக மாற உள்ள நடிகர் குறித்த தகவல், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  

PREV
15
'கைதி 2' படத்தில் அடுத்த ரோலக்ஸ் ரேஞ்சுக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோவா? பக்கா பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ் !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே, தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். இந்த படத்தை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான 'கைதி', 'மாஸ்டர்', மற்றும் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' ஆகிய படங்கள் வேற லெவலுக்கு வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

25

அதிலும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய, 'விக்ரம்' திரைப்படம் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு,450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. எனவே 'விக்ரம்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

'80ஸ் ரீயூனியன்' நிகழ்ச்சியில் 57 வயதில் நடனத்தில் பொளந்து கட்டிய ராதா..! அசர வைக்கும் ஆட்டத்தின் வைரல் வீடியோ

35

ஆனால் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து 67 வது படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் தயாராகி உள்ளார்.  இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கெளதம் மேனன், விஷால், நிவின் பாலி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கைதி 2' படம் குறித்த தகவல் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.
 

45

பொதுவாகவே லோகேஷ் கனகராஜன் படங்களில் ஹீரோக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி தான் 'விக்ரம்' படத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை போல, இந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி மற்றும் ஐந்தே நிமிடம் வந்து சென்ற சூர்யாவுக்கு அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்தார்.

OTT Release This Week: இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்கு வரிசை கட்டிய சூப்பர் ஹிட் படங்கள்!
 

55

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கைதி 2 படத்தில், ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் அடுத்த ரோலக்ஸ் போன்ற மிகவும் தனித்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் கலக்க உள்ளாராம். இது குறித்த பேச்சுவார்த்தை லாரன்ஸ் இடம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் இருந்தே அடுத்த சம்பவம் செய்ய லோகேஷ் கனகராஜ் தயாராகிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தைரியமாக உண்மையை சொன்ன ராமமூர்த்தி... சிக்கிய கோபி? சூடான ராதிகா... பரபரக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

Read more Photos on
click me!

Recommended Stories