சமீப காலமாக திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல்வேறு படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற, 'சர்தார்', 'காட் ஃபாதர் போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்த தகவல் இதோ...
இதை தொடர்ந்து, தமிழில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரின்ஸ்'. காமெடியை மட்டுமே அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், நவம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.
அதேபோல் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் சைக்காலஜி திரில்லராக கடந்த செப்டம்பர் மாதம்வெளியான திரைப்படம் 'சப்'. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.