குடும்ப தலைவிகளும், சாதிக்க முடியும் என்கிற கருத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. எதிர்பாராத பல திருப்பங்களுடன், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பெற்றோரின் ஆசைக்காக தனக்கு பிடிக்காத பாக்கியலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அவரை ஒரு சமையல் காரியாக மட்டுமே பார்க்கிறார். மனைவியின் மீது பாசம் இல்லாவிட்டாலும் கோபிக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகள் மீது அவ்வளவு பாசம். குறிப்பாக அவருடைய மகள் இனியா தான் அவருடைய உயிர்.