இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். போட்டியாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையில் உள்ள... கருத்து வேறுபாடுகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அதிலும் இன்று வெளியாகியுள்ள புரோமோவை பார்க்கும் போது.. அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளது தெரிகிறது.
அதில் மிகவும் முக்கியமான போட்டியாளர் என்றால் அது அசல் கோளாறு தான்... குயின்சி கையை கொஞ்சம் ஓவராக தடை வீடியோவில் சிக்கிய பின்னர், மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் எல்லை மீறி தொட்டதாக சமூக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.
குறிப்பாக நேற்று அசல் நிவாஷினியின் மடியில் தலை வைத்து கொண்டு, காதல் பாடல்களையெல்லாம் பாடினார். இருவரும் ஒன்றாகவே தான் பிக்பாஸ் வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் இடையே காதல் தீ பற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.