பின்னர் விஜயகாந்த்,, ரஜினி கமல்ஹாசன், பிரபு என அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து விட்டார். 2009 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான விஜயகாந்தின் மரியாதை படத்தில் இவர் நாயகியாக நடித்ததை அடுத்து 2012 ஆம் ஆண்டு தம்பிக்கோட்டை படத்தில் தான் இறுதியாக நடித்தி இருந்தார். அதோடு சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் மூலம் மீண்டும் தமிழில் தோன்றியிருந்தார் மீனா.
முன்னதாக 2009 ஆம் ஆண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் அன்றைய முன்னணி நாயகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஜோடிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐந்தாவது வயதில் தெறி படம் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆகிவிட்டார். இந்த படத்தில் விஜயின் மகளாக நைனிகா நடித்திருப்பார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அம்மாவைப் போலவே கவர்ந்து இழுத்து விட்டார் நைனிகாவும்.