தமிழ் திரையுலகின் இசை கடவுளாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவை, மாநிலங்களவை உறுப்பினராக நியமன செய்துள்ளதாக, பாரத பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் மூலம் தெரிவித்ததை தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரை பற்றி மறக்க முடியாத 10 நினைவுகளை இந்த செய்தியில் பார்ப்போம்...
50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால், பல ரசிகர்கள் நெஞ்சங்களை கட்டிப்போட்ட இளையாராஜா 1943 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரத்தில் பிறந்தவர்.
29
இன்று இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு, இந்த அடைமொழியை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆவர்.
2012 ஆம் ஆண்டு இந்த இசை மன்னருக்கு சங்கீத நாடக அகாதமி விருது கிடைத்தது. இந்த விருதும் இசைக்காக இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
89
2015 ஆம் ஆண்டு, இளையராஜாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு, மத்திய அரசு இசைஞானி இளையராஜாவுக்கு. பத்மவிபூஷன் விருது வழங்கிகௌரவித்தது .
99
இப்படி அடுக்கடுக்காக பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு, மேலும் ஒரு மணி மகுடமாய் மத்திய அரசு தற்போது இவரை மாநிலங்களவை எம்பியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.