போடுடா வெடிய... விஜய், அஜித், ரஜினிக்கு நிகராக இந்த விஷயத்தில் மாஸ் காட்ட போகும் லெஜண்ட் சரவணன்!!

Published : Jul 06, 2022, 08:36 PM ISTUpdated : Jul 06, 2022, 08:43 PM IST

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போல, லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி என் அன்புச்செழியன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
110
போடுடா வெடிய... விஜய், அஜித், ரஜினிக்கு நிகராக இந்த விஷயத்தில் மாஸ் காட்ட போகும் லெஜண்ட் சரவணன்!!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். 

210

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து  சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து  மகிழ்ச்சி அடைந்து "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம்  கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். 
 

310

மேலும், தமிழகம் எங்கும் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிட முடிவு செய்துள்ளது உறுதி ஆகியுள்ளது. 

மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
 

410

முதல் படத்திலியே விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

510

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும்  ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம்  ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

610

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: தொலைக்காட்சி நடிகை தற்கொலையை தொடர்ந்து அவரது காதலனும் தூக்கிட்டு மரணம்..!! பரபரப்பு தகவல்..!!
 

710

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

810

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது. 

910

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
 

1010

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். மேலும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories