தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்குவதற்கு முன்னர், சமந்தா மாடலிங் துறையில் இருந்து கொண்டே பட வாய்ப்பை தேடியவர். அப்போது தான் முதல்முதலில் வாங்கிய சம்பளம் குறித்து இவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
எதார்த்தமான நடிப்பு, வித்தியாசமான கதை தேர்வு மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் கூட இவரை தேடி வர துவங்கி விட்டது. எனவே தான் நடிக்கும் படங்களுக்கு சமந்தா சுமார் 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.