ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹினா கான். இவர் சில மாதங்களுக்கு முன்பு மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும், அதற்காக கீமோ தெரபி எடுத்து வருவதால் தலைமுடி உதிர்ந்து மொட்டை தலையுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். தனக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது காதலரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
25
ஹினா கானுக்கு மார்பகப் புற்றுநோய்
இந்தியாவில் புற்றுநோய் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என யாரும் விதிவிலக்கல்ல. பல பிரபலங்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் நடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹிந்தி நடிகை ஹினா கானும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். 37 வயதான அவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். 2008-ம் ஆண்டு ‘இந்தியன் ஐடில்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் 7 வருடங்கள் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
35
ராக்கி ஜெய்ஷ்வாலுடன் காதல்
அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது தொடரின் சூப்பர்வைஸிங் தயாரிப்பாளரான ராக்கி ஜெய்ஷ்வால் என்பவருடன் காதலில் விழுந்தார். 13 ஆண்டுகள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் நடித்து வந்த ஹினா கானுக்கு கடந்த ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலை இருப்பது தெரிய வந்தது. ஹினா கானுக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தும் மனமுடைந்து போனார். ஆனால் அவரது காதலர் அவரை கைவிடவில்லை. தற்போது ஹினா கான் மற்றும் ராக்கி ஜெயஷவால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஹினா கான், “இரண்டு வெவ்வேறு உலகங்களிலிருந்து, நாங்கள் அன்பின் பிரபஞ்சத்தை உருவாக்கினோம். எங்கள் வேறுபாடுகள் மங்கின. எங்கள் இதயங்கள் ஒன்றிணைந்தன. நீண்ட ஆயுட்காலம் வரை ஒரு பிணைப்பை உருவாக்கின. நாங்கள் எங்கள் வீடு, எங்கள் ஒளி, எங்கள் நம்பிக்கை மற்றும் அனைத்து தடைகளையும் தாண்டிச் செல்கிறோம். இன்று, எங்கள் ஒற்றுமை என்றென்றும் அன்பால் மூடப்பட்டுள்ளது. மனைவி மற்றும் கணவராக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
55
மனதார வாழ்த்தும் ரசிகர்கள்
காதலிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்து அவரை கைவிடாமல் கரம் பிடித்துள்ள காதலன் ராக்கி ஜெய்ஷாலை பலரும் வாழ்த்தியுள்ளனர். மேலும் இருவரும் இணைந்து நல்ல ஆரோக்கியத்துடனும், உடல் நலத்துடனும் நீண்ட கால வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.