2025-ம் ஆண்டு தொடங்கியதும் இந்த ஆண்டு தமிழ் சினிமா நிச்சயம் 1000 கோடி வசூலை அள்ளிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த ஆண்டு அஜித்தின் இரண்டு படங்களான குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் ஆகிய படங்கள் மீது மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மூன்று படங்களில் குட் பேட் அக்லி மட்டுமே வெற்றிபெற்றது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாகவும் அது உள்ளது. மற்ற இரண்டு படங்களும் அவுட் ஆகின.
24
1000 கோடி வசூல் கனவை நனவாக்குமா கூலி?
தக் லைஃப் படம் சொதப்பியதால் தற்போது கோலிவுட் மலைபோல் நம்பி உள்ள ஒரே படம் கூலி தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு அடுத்த 6 மாதத்தில் 1000 கோடி வசூல் அள்ளும் வாய்ப்பு உள்ள ஒரே ஒரு தமிழ் படம் கூலி தான். அப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.
34
அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் அடுத்த 6 மாதங்களில் சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் படங்களும் திரைக்கு வர உள்ளன. அதில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்தபடியாக தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லிக்கடை திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார் நடித்துள்ள 3BHK திரைப்படம் வருகிற ஜூலை 4ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதில் ஒன்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, அப்படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது. மற்றொன்று டியூடு. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.