தக் லைஃப் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி வராததால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கமல்ஹாசன். அவர் கைவசம் உள்ள படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் தக் லைஃப். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது மட்டுமின்றி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. இந்தியன் 2, தக் லைஃப் என இரண்டு படங்களின் தோல்வியால் அடுத்தது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கமல்ஹாசன். அவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
25
இந்தியன் 3
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்காக காத்திருக்கும் படம் இந்தியன் 3. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன. இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்ததால் இந்தியன் 3 படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இதனால் கமலின் அடுத்த படமும் டேஞ்சராகவே உள்ளது.
35
KH 237
கமல்ஹாசனின் 237-வது படத்தை அன்பறிவு இயக்க உள்ளனர். இது அவர்கள் இயக்கும் முதல் படமாகும். ஸ்டண்ட் மாஸ்டர்களான இவர்கள் இப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாக உள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
கமல்ஹாசன் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் கல்கி 2. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர். கல்கி முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் கமல்.
55
விக்ரம் 2
நடிகர் கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாக அமைந்தது விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படம் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக இருக்கிறது. அப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. அப்படமும் லோகேஷின் சினிமேட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறும் என்பதால் அதில் கார்த்தி, சூர்யா ஆகியோரும் நடிக்க வாய்ப்புள்ளது.