தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் திரிஷா நடிப்பில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன.
24
திரிஷாவின் கதாபாத்திரம் சர்ச்சை
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை திரிஷாவின் கதாபாத்திரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படத்தில் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா ஏன் நடித்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவரை கேலி செய்தும் வருகின்றனர். படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் கதைக்குத் தேவையில்லாதது. அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
34
திரிஷா ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்?
இப்படத்தில் திரிஷா ஒரு விலை மாதுவைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் அவர் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரிஷாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் பொருத்தமாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 70 வயது நடிகருடன் 42 வயது நடிகைக்கு காதல் காட்சிகள் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த டம்மி கதாபாத்திரத்திற்காகவா புரமோஷனில் இவ்ளோ பில்டப் கொடுத்தீர்கள் என்றும் வினவி வருகின்றனர்.
திரிஷாவின் ரசிகர்கள் அவரது கதாபாத்திரத்தில் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அவர் ஒரு விலை மாதுவாக மாறியதற்கான காரணம், இசை உலகில் அவர் சாதித்தது போன்ற காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோரையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இவை அனைத்தும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.