நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள தக் லைஃப் படமும் தோல்வி முகத்தில் உள்ளது. இந்த இரண்டு படங்களில் நடிக்க மறுத்த நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து கம்பேக் கொடுக்கும் முனைப்போடு அவர் நடித்த படம் தான் தக் லைஃப். இப்படம் வெற்றியடையும் என அவர் மலைபோல் நம்பி இருந்தார். ஆனால் தக் லைஃப் படத்தின் ரிசல்ட் அப்படியே உல்டா ஆனது. தக் லைஃப் திரைப்படம் இந்தியன் 2-வை விட மோசமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை தூக்கியெறிந்த ஒரு நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
இந்திய 2-வுக்கு நோ சொன்ன துல்கர் சல்மான்
அந்த நடிகர் வேறுயாருமில்லை துல்கர் சல்மான் தான். அவரை இந்தியன் 2 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் தான் துல்கரை நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால் அவர் நோ சொல்லிவிட்டார். இப்படத்திற்கு நோ சொல்லிவிட்டு அவர் நடித்த படம் தான் சீதா ராமம். அப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் துல்கர் சல்மான் இராணுவ வீரராக நடித்திருந்தார்.
34
தக் லைஃப் படத்தில் துல்கருக்கு பதில் நடித்த சிம்பு
அதேபோல் கமல்ஹாசனின் தக் லைஃப் பட வாய்ப்பையும் துல்கர் நிராகரித்து இருக்கிறார். தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் உடன் துல்கர் சல்மானும், ரவி மோகனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருவருமே அப்படத்தில் இருந்து விலகிவிட்டனர். இதையடுத்து துல்கருக்கு பதில் சிம்புவும், ரவி மோகனுக்கு பதில் அசோக் செல்வனும் நடித்தனர். தக் லைஃப் படத்துக்கு நோ சொல்லிவிட்டு துல்கர் தேர்வு செய்து நடித்த படம் லக்கி பாஸ்கர். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இப்படி இரண்டு அட்டர் பிளாப் படங்களுக்கு நோ சொல்லிவிட்டு இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் துல்கர் சல்மான், நிஜமாகவே லக்கி பாஸ்கர் தான் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். தக் லைஃப் படத்தை பார்த்த சிலர், நல்ல வேளை துல்கர் எஸ்கேப் ஆகிட்டாரு என மீம்ஸ் போட்டு வருகிறார். இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்த ரோலை துல்கர் சல்மானை போல் நடிகர் சிவகார்த்திகேயனும் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.