ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடித்திருந்தனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
24
ஓடிடியில் ரிலீஸ் ஆன லால் சலாம்
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த இப்படம் தோல்வி அடைந்ததற்கு அப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் காரணம் என ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த ஓராண்டாக லால் சலாம் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதனிடையே அண்மையில் அந்த ஹாட்டு டிஸ்க் மீட்கப்பட்டு அதில் உள்ள காட்சிகளை வைத்து படத்தை ரீ-எடிட் செய்த படக்குழு, தற்போது கூடுதல் காட்சிகளுடன் அப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர். லால் சலாம் திரைப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் கூடுதல் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.
34
தியேட்டரில் தோல்வியை தழுவிய லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.31.25 கோடி வசூலித்தது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் திருவாவாக நடித்துள்ளார். லிவிங்ஸ்டன், விிக்னேஷ், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், நிரோஷா, விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணன், போஸ்டர் நந்தகுமார், ஆதித்ய மேனன், அமித் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் நடித்த '3', 'என்ற வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யாவின் மூன்றாவது படம் 'லால் சலாம்'. இப்படத்தின் கதையை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். இப்படத்தின் திரைக்கதையை ஐஸ்வர்யா எழுதியுள்ளார். திரையரங்குகளில் வெளியானபோது படுமோசமான விமர்சனங்கள் வந்ததால் படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது ரீ-எடிட் செய்த வெர்ஷனை ஓடிடியில் பார்த்த ரசிகர்கள், படம் வேறலெவலில் இருப்பதாக பாசிடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தக் லைஃப் படத்துக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.