நடிச்ச எல்லா படமும் ஹிட்; சினிமாவை விட்டு விலகி 24 வருஷம் ஆனாலும் 300 கோடிக்கு அதிபதி - யார் இவர்?

Published : Jun 06, 2025, 11:52 AM IST

சினிமாவை விட்டு விலகிய பின்னரும் 300 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல நடிகை பற்றியும் அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Rare Childhood Photos of Shalini

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆனவர்கள் பெரும்பாலும் வளர்ந்த பின்னர் ஹீரோ - ஹீரோயினாக நடித்து பிரபலமானதில்லை. அப்படி பிரபலமானவர்களில் பெரும்பாலனவர்கள் ஹீரோக்களே. ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து உச்சத்தில் இருந்ததை போல் ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

25
கோலிவுட்டில் கலக்கிய பேபி ஷாலினி

அந்த நடிகை வேறுயாருமில்லை... ஷாலினி தான். இவர் 1983-ம் ஆண்டு மலையாள படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரின் நடிப்புத் திறமையால் வியந்த தயாரிப்பாளர்கள் பேபி ஷாலினியை முதன்மையாக வைத்து படம் எடுக்கும் அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தார். இதையடுத்து வளர்ந்து ஹீரோயின் ஆனது தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார் நடிகை ஷாலினி.

35
விஜய் - அஜித் படங்களில் ஷாலினி

இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தை பாசில் இயக்கினார். இப்படத்தின் மலையாள வெர்ஷனிலும் ஷாலினி தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இரண்டு மொழிகளிலுமே சக்கைபோடு போட்டது. இதயடுத்து விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்த ஷாலினி, பின்னர் அஜித்துடன் கூட்டணி அமைத்தார். இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தனர்.

45
அஜித்தை காதலித்து கரம்பிடித்த ஷாலினி

அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அஜித் மீது காதல் வயப்பட்ட ஷாலினி, அடுத்த ஆண்டே நடிகர் அஜித்தை திருமணம் செய்துகொண்டார். அஜித்தை திருமணம் செய்வதற்கு முன்பே அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் கமிட்டாகி இருந்த ஷாலினி, அப்படங்களை நடித்து கொடுத்த பின்னர் சினிமாவை விட்டே விலகினார். இதையடுத்து அவருக்கு அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார். இதனால் இல்லற வாழ்க்கையில் பிசியான ஷாலினிக்கு கடந்த 2015-ம் ஆத்விக் என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது.

55
ஷாலினி குழந்தைப் பருவ புகைப்படம்

நடிகை ஷாலினி சினிமாவை விட்டு விலகி 21 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ஷாலினி. 5 படத்தோடு சினிமாவை விட்டு விலகினாலும் தற்போது கோடீஸ்வரியாக வாழ்ந்து வருகிறார் ஷாலினி. அவரது கணவர் அஜித் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஷாலினியின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories