நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அவர் கொடுத்த ஹிட் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு இந்த அளவுக்கு மார்க்கெட் எகிறியதற்கு காரணம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. உலகளவில் ரூ.450 கோடி வசூலித்தது.
24
படுதோல்வியை சந்தித்த கமல்
விக்ரம் படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வந்தன. அதில் ஒன்று கேமியோ (கல்கி) ரோலில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த இந்தியன் 2 படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. ஷங்கர் என்கிற பிரம்மாண்ட இயக்குனருடன் கமல் கூட்டணி அமைத்ததால் அப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதையெல்லாம் அப்படம் பூர்த்தி செய்யாததால் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கமலை கடுமையாக ட்ரோல் செய்தனர்.
34
ட்ரோல் செய்யப்படும் தக் லைஃப்
தற்போது இந்தியன் 2 படமே இதற்கு நன்றாக இருந்தது என சொல்லும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். அதுதான் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். கமலுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. இப்படம் தற்போது அதிகளவில் ட்ரோல் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், அவர் புரமோஷனில் படத்தை ஆஹா.. ஓஹோ என புகழ்ந்தது தான்.
ஷங்கர், மணிரத்னம் என இரண்டு ஜாம்பவான்கள் இயக்கத்தில் நடித்தும் தொடர் தோல்விகளை கொடுத்துள்ள கமல்ஹாசன், கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 3 ஹிட் படங்களை தான் கொடுத்திருக்கிறார். விஸ்வரூபம், பாபநாசம், விக்ரம் ஆகிய மூன்று படங்களைத் தவிர இந்த காலகட்டத்தில் அவர் நடித்த மன்மதன் அம்பு, விஸ்வரூபம் 2, தூங்காவனம், உத்தம வில்லன், இந்தியன் 2 ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. தக் லைஃபும் அந்த லிஸ்ட்டில் இணைய அதிகம் வாய்ப்பு உள்ளது.