மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
தக் லைஃப் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மணிரத்னம் இப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் அபிராமி, திரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டு இருந்தார்.
25
விமர்சிக்கப்படும் தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் நேற்று ரிலீஸ் ஆனது. உலகமெங்கும் சுமார் 2 ஆயிரத்து 200 திரைகளுக்கு மேல் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு முதல் நாளே படு மோசமான விமர்சனங்கள் குவிந்தன. கமல் ரசிகர்களே இப்படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
35
வசூலில் கடும் சரிவை சந்தித்த தக் லைஃப்
தக் லைஃப் படம் இந்தியன் 2-வை விட மோசமாக இருப்பதாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்படத்தால் தற்போது சந்தோஷத்தில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். ஏனெனில் அங்கு மொழி சர்ச்சை காரணமாக தக் லைஃப் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் முதல் நாளில் 50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் படு மோசமான விமர்சனம் காரணமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலும் கடும் சரிவை சந்தித்து உள்ளன.
அதன்படி தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.25 முதல் 30 கோடி வரை வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இப்படம் வெறும் ரூ.17 கோடி தான் வசூலித்து உள்ளதாம். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ரூ.15.4 கோடி வசூலித்த இப்படம், தெலுங்கில் 1.5 கோடியும் வசூலித்து இருக்கிறாது. இருப்பதிலேயே இப்படம் படு மோசமாக வசூலித்துள்ளது இந்தியில் தான். அங்கு ஓடி ஓடி புரமோஷன் செய்யப்பட்டும் இப்படம் வெறும் 10 லட்சம் தான் வசூலித்துள்ளதாம்.
55
சிம்பு - கமல் நடித்தும் போனி ஆகாத தக் லைஃப்
கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கூட முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.21 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ஆனால் தக் லைஃப் படத்தில் சிம்பு - கமல் என இரு உச்ச நட்சத்திரங்கள் நடித்தும் அமரன் பட வசூலை கூட அவர்களால் எட்டமுடியவில்லை. விமர்சனங்கள் படு மோசமாக உள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் தக் லைஃப் படத்தின் வசூல் கடும் சரிவை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.