சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களில் முன்னிலை வகித்து வருவது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் தொடர்களை தற்போது இளைஞர்களே விரும்பிப் பார்த்து வருகிறார்கள். அந்த அளவுக்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய தொடர்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவி சீரியல்களில் மக்கள் மத்தியில் எதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அதன் டிஆர்பி நிலவரத்தை வைத்து தான் கணிக்கிறார்கள். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 21வது வாரத்திற்கான டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி இருக்கிறது.
24
விஜய் டிவி டாப் 5 சீரியல்கள்
அந்த வகையில் சின்ன மருமகள் சீரியல் தான் இந்த வாரம் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. நவீன் நாயகனாக நடிக்கும் இந்த சீரியல் 5.59 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. அடுத்ததாக நான்காவது இடத்தில் மகாநதி சீரியல் உள்ளது. பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் லட்சுமி பிரியா நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலுக்கு 6.71 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் முன்னேறு வருகிறது.
34
சரிவை சந்தித்த சிறகடிக்க ஆசை
அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. விஜய் டிவியில் இதுவரை நம்பர் 1 சீரியலாக இருந்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் கடும் சரிவை சந்தித்து உள்ளது. வெற்றி வசந்த், கோமதிப்பிரியா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் இந்த சீரியல் 7.32 டிஆர்பி புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக இதன் கதைக்களம் டல் அடித்து வருவதே சிறகடிக்க ஆசை சீரியலின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. மதுமிதா கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியல் 7.49 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தற்போது நேரம் மாற்றத்திற்கு பின்னரே அய்யனார் துணை சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த வார டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தான். இந்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலைக் காட்டிலும் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று முதன்முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த சீரியலுக்கு 7.68 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.