விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் ஆன நிலையில், தற்போது அவரது கணவர் வசி போட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் டிவி பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனார். தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுமார் 6 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
25
பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம்
பிரவீனை விவாகரத்து செய்து பிரிந்த பிரியங்காவுக்கு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வசி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரியங்காவுக்கும் - வசி சச்சிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியங்காவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
35
பிரியங்கா - வசி சச்சி ஹனிமூன்
பிரியங்காவின் கணவர் வசி சச்சி டிஜேவாக பணியாற்றி வருகிறார். கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளை நடத்திக் கொடுக்கும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றையும் டிஜே வசி நிர்வகித்து வருகிறார். திருமணமான கையோடு, பிரியங்காவும் அவரது கணவர் வசியும் லண்டனுக்கு ஹனிமூன் சென்றனர். இதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சில எபிசோடுகளில் பிரியங்கா கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் வசி சச்சி போட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில் பிரியங்கா உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, பிரியங்கா தேஷ்பாண்டேவை குறிப்பிட்டு எப்போ வர்றீங்க என கேட்டுள்ளார். அதற்கு கமெண்ட் மூலம் ரிப்ளை கொடுத்துள்ள பிரியங்கா, ஐ லவ் யூ... இன்னும் சில நாட்களில் வந்துவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
55
பிரியங்காவுக்கு ரசிகர்கள் ரிப்ளை
இதைப்பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆகுது அதற்குள் ஏன் கணவரை தனியே தவிக்க விட்டு சென்றீர்கள் என்றும் பிரியங்காவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற காதலுக்காக தான் பிரியங்கா ஏங்கி வந்ததாகவும், இறுதியாக அவர் விரும்பிய நபர் அவருக்கு கிடைத்துவிட்டதாக சந்தோஷத்துடன் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.