'தக் லைஃப்' போலவே கடும் பிரச்சனைகளை சந்தித்த கமலஹாசனின் 5 திரைப்படங்கள்

Published : Jun 07, 2025, 11:16 AM IST

கன்னட மொழி சர்ச்சையால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கமலஹாசன் திரைப்படத்திற்கு சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறை அல்ல. அப்படிய சர்ச்சைக்குள்ளான 5 படங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
17
‘தக் லைஃப்’ படத்திற்கு எழுந்த தடை

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி” என்று கூறினார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இறுதியில் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கமலஹாசனின் திரைப்படங்கள் இது போல் சர்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பல திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. கமலின் சர்ச்சையில் சிக்கிய படங்கள் என்னென்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

27
விருமாண்டி (2004)

கமலஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ‘விருமாண்டி’. இந்த படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதய தலைப்போடு படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து தேனியில் நடந்து வந்த படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் கமலஹாசன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு படத்தின் தலைப்பு ‘விருமாண்டி’ என பெயர் மாற்றம் பெற்று வெளியானது. 10 ஆண்டுகள் கழித்து சோழதேவன் என்பவர் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டார். ஆனால் அந்த படத்திற்கு சர்ச்சை எதுவும் ஏற்படவில்லை.

37
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004)

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் தலைப்பு சர்ச்சைக்குள்ளானது. மருத்துவர்களை வசூல்ராஜா என குறிப்பிடும் வகையில் தலைப்பு இருப்பதாக கூறி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் தலைவராக இருந்து கே.ஆர் பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மருத்துவர்களை அவதூறு செய்வதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான அமர்வு வசூல்ராஜா என்பது ஒரு நபரின் செல்ல பெயராக இருக்கலாம். அது மருத்துவர்களை குறிப்பிடும்படியாக இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அதே பெயரிலேயே படம் வெளியானது.

47
தசாவதாரம் (2008)

கமல் பத்து வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ‘தசாவதாரம்’. இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறி தாம்பரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 வேடங்கள் என்பதை தவிர இரு கதைகளிலும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சனாதன கழகம் என்ற அமைப்பு இந்த படம் சைவ வைணவ மோதல்களை தூண்டுவதாக கூறி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “முதலில் படத்தை பார்க்க வேண்டும். படத்தை பார்க்காமலே தடை கோருவது சரியல்ல” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

57
விஸ்வரூபம் (2013)

விஸ்வரூபம் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. தலைப்பு சமஸ்கிருதத்தில் இருப்பதாகவும், தமிழில் வைக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியது. ஆனால் இந்த எதிர்ப்பை புறக்கணித்து படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினர். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் அறிவித்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின்னர் டிடிஎச்சில் வெளியிட முடிவெடுக்கப்பட்டது. இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்ட இருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில் 15 நாட்கள் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் படம் வெளியான நிலையில், நீதிமன்ற தீர்ப்பால் அங்கும் படம் நிறுத்தப்பட்டது.

67
ஜெயலலிதாதான் காரணம் - கருணாநிதி குற்றச்சாட்டு

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என தெரிவித்தார். பிறகு இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சில இடங்களில் வசனங்களை மௌனமாக்கி(Mute) வெளியிட கமல் ஒப்புக்கொண்டதையடுத்து படம் வெளியானது. படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கருணாநிதி, தானும், ப.சிதம்பரமும் கலந்து கொண்ட விழாவில் வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவரை பார்க்க விரும்பதாக கமலஹாசன் கூறியது முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆத்திரப்படுத்தி விட்டதாகவும், அதனால் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் ரூ.220 கோடி வசூலித்திருந்தது.

77
உத்தமவில்லன் (2015)

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இந்த இந்தப் படத்தில் “என் உதிரத்தில் விதை..” என்று தொடங்கும் பாடலுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்தப் பாடலில் “வெட்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்..” என்ற வரி இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக இருப்பதாக கூறி ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. படத்தை எதிர்த்து இந்து மக்கள் அதைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் அனைத்து எதிர்ப்பையும் மீறி படம் வெளியானது.

Read more Photos on
click me!

Recommended Stories