கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்பவரை வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.