தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி. தமிழில் ஏற்கனவே கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ள இவர், தற்போது நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சங்கீதா, குஷ்பு, பிரபு, ஷியாம், சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே இப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.280 கோடி வரை வசூலித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.