தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் அங்கு ஜாதி ரதனலு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப்பை தேர்வு செய்தார் சிவகார்த்திகேயன். இதனால் படம் வேறலெவலில் வெற்றியடைய போகிறது என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
படத்தின் முதல் ஷோவிலேயே அதன் ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது. எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது இந்த படம். இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் காமெடி காட்சிகள் எடுபடாதது தான். இது மிஸ்டர் லோக்கல் பார்ட் 2 என்றெல்லாம் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒரே வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இப்படம் தூக்கப்பட்டதால் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.