OTT-யை ஆக்கிரமித்த பிரம்மாண்ட படங்கள்.. Theatre-ல் வரிசை கட்டும் சிறுபட்ஜெட் மூவீஸ் - இந்த வார வெளியீடுகள் இதோ

Published : Nov 03, 2022, 08:00 AM IST

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
OTT-யை ஆக்கிரமித்த பிரம்மாண்ட படங்கள்.. Theatre-ல் வரிசை கட்டும் சிறுபட்ஜெட் மூவீஸ் - இந்த வார வெளியீடுகள் இதோ

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே வாரந்தோறும் ஏதாவது ஒரு பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் இந்த நவம்பர் மாதத்தை பொருத்தவரை முதல் வாரத்தில் ரிலீசாக உள்ள படங்கள் அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். அதே வேளையில் பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடி-யில் வெளியாக உள்ளன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

29

ஓடிடி வெளியீடுகள்

நாளை நவம்பர் 4-ந் தேதி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

39

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படமும் விரைவில் ஓடிடி-க்கு வர உள்ளது. இப்படம் நவம்பர் 1-ந் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன் விரைவில் படம் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார்.

49

நாகார்ஜுனா நடிப்பில் கடந்த மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் தி கோஸ்ட். இப்படம் நவம்பர் 2-ந் தேதியே நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகி உள்ளது.

59

பாலிவுட்டில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை படைத்த பிரம்மாஸ்திரா படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

69

இதுதவிர நாளை நவம்பர் 4-ந் தேதி கையும் களவும் என்கிற வெப்தொடரும் ரிலீசாக உள்ளது. கரு. பழனியப்பன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஸ்ருதி ஹாசன், விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்கள் விரும்பி குடிக்கும் கருப்பு நீரில் இத்தனை பலன்களா?

79

தியேட்டர் வெளியீடுகள்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காஃபி வித் காதல் திரைப்படம் நாளை நவம்பர் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

89

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படமும் நாளை தான் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

99

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் நித்தம் ஒரு வானம் திரைப்படமும் நாளை திரையரங்கில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... செம்ம தில்... லேடி சூப்பர் ஸ்டார் செய்ய தயங்கும் விஷயத்தை கூட செய்து கெத்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

click me!

Recommended Stories