ஸ்ருதி ஹாசன், விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்கள் விரும்பி குடிக்கும் கருப்பு நீரில் இத்தனை பலன்களா?

First Published | Nov 2, 2022, 11:56 PM IST

பல திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், உடல்பயிற்சி செய்யும் போது கருப்பு நீரை அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நீரில் உள்ள பலன்கள் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

இந்த கருப்பு நீரை (Black Water ) காரத் தண்ணீர் என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக தண்ணீர் நிறமற்றதாகவே இருக்கும், ஆனால் இந்த நீர் கருப்பு நிறத்தில் உள்ளது. இதனை உடல் ஆரோக்கியத்திற்காக பல பிரபலங்கள் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக நடிகை மலைக்கா அரோரா, கரிஷ்மா கபூர், மணீஷ் மல்ஹோத்ரா , ஸ்ருதி ஹாசன், விராட் கோலி போன்ற பிரபலங்கள் கருப்பு நீருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சரி இந்த நீரில் அப்படி என்ன தனித்துவமான பலன்கள் உள்ளது என்பதை பார்ப்போம்.

கருப்பு நீர் அல்லது கார கருப்பு நீர் என்று அழைக்கப்படும் இந்த தண்ணீரில், மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களால் அதிகம் நிறைந்துள்ளது. அதாவது எட்டு முதல் ஒன்பது வரை இருக்கும் உயர்ந்த கார நீர் pH மூலம் அதன் தனித்துவமான நிறத்தை அடைகிறது. 

செம்ம தில்... லேடி சூப்பர் ஸ்டார் செய்ய தயங்கும் விஷயத்தை கூட செய்து கெத்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Tap to resize

இந்த நீரை பருகுவதன் மூலம், முகப்பரு, தோல் பிரச்சனைகள், நீங்கி உடல் ஆரோக்கியம் பெரும் என கூறுகிறார்கள். அதே போல்,  அதிக அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் , செரிமான பிரச்சனைகளுக்கும், இதய ஆரோக்கியத்திற்கும், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களை கருப்பு நீர் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

கருப்பு நீர் உடல் பயிற்சிக்கு பின் அருந்துவதால் உடலில், ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,  நீரேற்றம் அளவை பராமரிக்க உதவுகிறது.

மோசமான பிகினி உடையில்... கவர்ச்சி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்! மாலத்தீவை சூடேறிய ஹாட் போட்டோஸ்!

கருப்பு நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிக உடற்பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு, நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது.

கருப்பு நீர் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதன் நுகர்வு எலும்பு தேய்மானத்தை குறைக்க உதவுகிறது, இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவரை எளிதில் தாக்குவதை குறைக்கலாம். அதே போல் உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் பணிகளை  செய்கிறது. செரிமான பிரச்சனைகளை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கு நடந்த வளைகாப்பு..! நிறைமாத நிலவாக மஞ்சள் சேலையில் ஜொலிக்கும் போட்டோஸ்!

Latest Videos

click me!