சூர்யாவுடன் கை கோர்க்கும் ஜெய் பீம்... இந்த முறை வேற பிளான்...

Published : Nov 03, 2022, 11:09 AM ISTUpdated : Nov 03, 2022, 12:27 PM IST

முன்னதாக சரவணா பவன் ஓனர் ராஜகோபால் குறித்த கதையை இயக்குனர் ஞானவேல் எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
16
சூர்யாவுடன் கை கோர்க்கும் ஜெய் பீம்... இந்த முறை வேற பிளான்...
court ordered fir against suriya for jai bhim

சூர்யாவின் சமீபத்திய ஹிட் லிஸ்டில் முதலிடம் பிடித்திருப்பது ஜெய் பீம் தான். இருளர் வாழ்க்கையை  நம் கண் முன்னே நிறுத்திய இந்த படம் பல விருதுகளையும் குவித்திருந்தது. ஜெய் பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

26
Jai Bhim

கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த லாக்கப் டெத் குறித்த கதைக்களத்தை கையில் எடுத்த இயக்குனர் அதனை அற்புதமாக படைத்திருந்தார். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் தான். இவர் சந்தித்த வழக்குகளிருந்து சில அனுபவங்களின் பகிர்ந்ததன் வாயிலாக ரசிகர்களுக்கு ஜெய் பீம் கிடைத்தது.

Bigg Boss Tamil Season 6 Prom : இந்த டிவி - அந்த டிவியின் சூப்பர் பிளான்...நெஞ்சங்களை பதறவிட்ட விக்ரமன்

36

இதில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். பாதிக்கப்பட்ட நபராக மணிகண்டனும் அவரது மனைவியாக லிஜோமோல் ஜோஸ் வந்து ரசிகர்களை அவர்களது உலகத்திற்கே இட்டுச் சென்றனர். சிறையில் காவல்துறையினரின் துன்புறுத்தலால் மரணத்தை தழுவும் அந்த நபர் குறித்தான கதைகளம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

46

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், சில சர்ச்சைகளையும் சந்தித்தது. ஜாதி ரீதியான மிரட்டல்கள் வந்தது. எதற்கும் அசராத இந்த டீம் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்தது. அதோடு படத்தின் லாபத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை இருளர் நல திட்டத்திற்காக நடிகர் சூர்யா வழங்கியிருந்தார்.

56

jai bhim 

ஆஸ்கர் வரை சென்ற இந்த டீம் மீண்டும் இணை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இயக்குனர் ஞானவேல் தற்போது இயக்க உள்ள படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்க உள்ளனர். இந்த படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் அனைத்துமே முடிந்து விட்டதாம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் முக்கிய வேடத்தில் வரும் சூர்யாவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

66
jai bhim

தற்போது சூர்யா வணங்கான் வாடிவாசல் என இருப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு சூர்யா 42 என்ற பெயரில் சிவாவுடன் கைகொர்த்துள்ளார். இது குறித்தான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை பெற்றிருந்தது. 42 படத்திற்குப் பிறகு வெற்றிமாறனின் வாடிவாசலில் சூர்யா இணைவார் என  தெரிகிறது. அதோடு வணங்கானின் முதல் பார்வையைத் தவிர மற்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு ஞானவேல் - சூர்யாகூட்டணி படம் உருவாகும்  எனவும் ஒரு தகவல் உண்டு. முன்னதாக சரவணா பவன் ஓனர் ராஜகோபால் குறித்த கதையை இயக்குனர் ஞானவேல் எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories