கணவரின் புகைப்படங்களை தூக்கியெறிந்த ஹன்சிகா... அப்போ டைவர்ஸ் கன்ஃபார்மா?

Published : Aug 05, 2025, 03:30 PM IST

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.

PREV
14
Hansika Wedding Photos Deleted

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய ஹன்சிகா, ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் நடித்தாலும், அங்கு இவர் நடித்த படங்கள் எடுபடாததால், கோலிவுட்டில் ஐக்கியம் ஆனார். இங்கு இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால், தொடர்ச்சியாக விஜய், சூர்யா, விஷால், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் மளமளவென குறையத் தொடங்கின. அதன்பின் ஸ்லிம் ஆனபோதிலும் அவரால் மீண்டும் மார்கெட்டை பிடிக்க முடியவில்லை.

24
ஹன்சிகா திருமணம்

சினிமாவில் மார்க்கெட் போனால் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவார்கள். ஹன்சிகாவும் அதே ரூட்டை தான் பாலோ செய்தார். இவர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம், ஆனது. இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது. ஹன்சிகாவின் கணவர் சோஹைல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவர் முதலில் திருமணம் செய்துகொண்டது வேறுயாருமில்லை.... ஹன்சிகாவின் தோழியை தான். அந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார்.

34
ஹன்சிகா விவாகரத்து சர்ச்சை

ஹன்சிகாவுக்கும் சோஹைலுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. சோஹைல் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரது வீட்டை விட்டு வெளியேறிய ஹன்சிகா, கடந்த சில மாதங்களாக தன்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்து வருகிறாராம். ஆனால் கடந்த மாதம் அளித்த பேட்டியில், இந்த விவாகரத்து பற்றி கேட்டபோது அது உண்மையில்லை என கூறி இருந்தார் ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதூரியா.

44
திருமண புகைப்படங்களை நீக்கிய ஹன்சிகா

இந்த விவாகரத்து விவகாரம் பற்றி ஹன்சிகா வாய்திறக்காமல் இருந்தாலும், அவர் சைலண்டாக செய்துள்ள செயல், இவர்களின் விவாகரத்தை கிட்டத்தட்ட உறுதியாக்கி உள்ளது. அதன்படி நடிகை ஹன்சிகா, தன்னுடைய கணவர் சோஹைல் உடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். இதற்கு முன்னர் சமந்தா போன்ற நடிகைகள் விவாகரத்து அறிவிக்கும் முன் இதுபோன்ற செயலை செய்திருப்பதால் ஹன்சிகா விரைவில் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories