War 2 வை விட அதிக முன்பதிவு..! அமெரிக்காவையே அதிர வைத்த சூப்பர் ஸ்டாரின் கூலி

Published : Aug 05, 2025, 02:34 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள கூலி திரைப்படத்திற்கு அமெரிக்காவில் வார் 2 படத்தைவிட அதிகளவில் டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது.

PREV
14
Coolie Beat War 2 in America

லோகேஷ் கனகராஜும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் உபேந்திரா, அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் சாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் வெளியான மோனிகா பாடல் தான் தற்போது இந்தியா முழுவதும் செம வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கூலி மற்றும் வார் 2 படங்களின் அமெரிக்க முன்பதிவு நிலவரம் வெளியாகி இருக்கிறது.

24
கூலி vs வார் 2

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு போட்டியாக ஆகஸ்ட் 14ந் தேதி வார் 2 என்கிற பான் இந்தியா படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். இப்படத்தினால் கூலி படத்தின் வசூல் பாதிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், ரிலீசுக்கு முன்பே வார் 2 படத்துக்கு மரண பயத்தை காட்டி இருக்கிறது கூலி திரைப்படம்.

34
முன்பதிவில் கெத்து காட்டிய கூலி

நடிகர் ரஜினிகாந்துக்கு வெளிநாடுகளிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் அமெரிக்காவில் அவரது படங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கும். அந்த வகையில் கூலி திரைப்படத்திற்கு அங்கு செம டிமாண்ட் உள்ளதாம். இப்படத்தின் முன்பதிவு வசூல் மட்டுமே 10 லட்சம் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டதாம். அதேபோல் இப்படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு மொத்தம் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறதாம். இதனால் கூலி படம் அமெரிக்காவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

44
வார் 2 படத்தை பந்தாடிய கூலி

முன்பதிவில் கூலி படத்தைக் காட்டிலும் வார் 2 படம் காத்துவாங்கி வருகிறது. கூலி திரைப்படம் முன்பதிவு மூலம் மட்டும் அமெரிக்காவில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்துவிட்டன. ஆனால் வார் 2 திரைப்படம் இதுவரை முன்பதிவு மூலம் வெறும் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் வசூலித்துள்ளது. கூலி படத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சம் டாலர்கள் கம்மியாக உள்ளது வார் 2 கலெக்‌ஷன். அதுவும் அங்கு வார் 2 படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு தான் அதிகப்படியான டிக்கெட் விற்பனையாகி இருக்கிறதாம். இதன்மூலம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கூலி சம்பவம் செய்யப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories