விஜய் டிவியில் லேட்டஸ்டாக தொடங்கப்பட்டு டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் அய்யனார் துணை. சிறகடிக்க ஆசைக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும் சீரியலாக அய்யனார் துணை இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக எதிர்நீச்சல் மதுமிதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோழன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சேஜு நடிக்கிறார். இந்த சீரியலில் நகை மற்றும் பணத்தை கொண்டு சென்ற சோழனை ஒரு கும்பல் கடத்திவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்கிறது. அவரை தேடி அவரது தம்பிகள் செல்கிறார்கள். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
காப்பாற்றப்படும் சோழன்
சோழனை எங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் அவரை தேடி அலையும் அவரது தம்பிகள், எப்படியாவது அண்ணனை காப்பாற்றிவிட வேண்டும் என தேடிச் செல்கிறார்கள். போகிற வழியில், எதிர்பாராத விதமாக கார் ஒன்றின் மீது சோழனின் தம்பிகள் சென்ற பைக் மோதுகிறது. இதனால் அவர்கள் கிழே விழுந்துவிடுகிறார்கள். அந்த காரில் தான் சோழனை கடத்தல் கும்பல் கொண்டு செல்கிறது. இந்த விஷயம் சோழனின் தம்பிகளுக்கும் தெரியவருகிறது. இதையடுத்து கடத்தல் காரர்களை அனைவரும் சேர்ந்து அடித்து துரத்திவிட்டு சோழனை காப்பாற்றிவிடுகிறார்கள்.
34
சோழன் பணத்தை திருடினாரா?
சோழனை காப்பாற்றிய கையோடு அனைவரும் நிலா வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு இருந்தவர்களிடம் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி சோழன் மேல எந்த தப்பும் இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே மனோகர் மற்றும் தாஸ் இருவருமே, சோழன் தான் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக, அவன் ரொம்ப மோசமானவன் என்று சொல்லி இருக்கிறார்கள். நிலாவும் இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பது தெரியாமல் குழப்பத்திலேயே இருக்கிறார்.
சகோதரர்கள் அனைவருமே இணைந்து சோழன் மீது எந்த தவறும் இல்லை என்பதையும், நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மனோகர் மற்றும் தாஸ் தான் காரணம் என்கிற உண்மையையும் உடைப்பார்களா? அல்லது சோழன் தான் எல்லா தப்பும் செய்துவிட்டார் என்கிற பிளாக் மார்க் உடன் அவர்கள் வீட்டுக்கு திரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. தமிழில் ஹிட்டான அய்யனார் துணை சீரியல் தற்போது பிற மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.