மீனாவை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜயா... இது கனவா? இல்லை நிஜமா? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Aug 05, 2025, 10:30 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் மீனாவை குறைசொல்லிக் கொண்டே இருக்கும் விஜயா தற்போது அவரை தங்கம் செல்லம் என கொஞ்சுகிறார். அது ஏன் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka aasai Serial Today Episode

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை போலீசார் கைது செய்து சென்றதை அடுத்து, போலீசிடம் பேசி முத்துவும், மீனாவும் அவரை சிறையில் அடைக்க விடாமல் தடுக்கின்றனர். பின்னர் வீட்டுக்கு வரும் ரோகிணியை அவரது மாமியார் விஜயா எச்சரிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட் நடந்திருக்கிறது. முக்கியமாக விஜயா மனசு மாறி இனிமே நல்ல விஷயங்கள் மட்டும் தான் செய்வேன் என முடிவெடுத்து கோவிலுக்கு செல்கிறார். அங்கு விஜயாவை சந்திக்கும் ஒரு பெண், நல்ல விஷயம் செய்பவர்களுக்கு நான் டாக்டர் பட்டம் வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார்.

24
டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்படும் விஜயா

அதைக் கேட்டதும் விஜயாவுக்கும் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்கிற ஆசை வருகிறது. மீனாவின் திருமணம் முதல் தற்போது கிருஷ் வீட்டில் இருப்பது வரை வீட்டில் நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் காரணம் நான் தான் என அந்த பெண்ணிடம் பில்டப் செய்கிறார் விஜயா. இதுமட்டுமில்லாமல் இனி செய்யும் நிறைய நல்ல விஷயங்களை வீடியோ எடுத்து என்னிடம் கொடுங்கள், சீக்கிரமாகவே உங்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தருகிறேன் என சொல்கிறார். இதையடுத்து ஆளே டோட்டலாக மாறிய விஜயா, வீட்டில் உள்ள அனைவரையும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்.

34
மீனாவை கொஞ்சிய விஜயா

அதன் முதல்படியாக மீனாவுக்கு புது சேலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் விஜயா. அவர் சேலை வாங்கிக் கொடுப்பதையே நம்ப முடியாமல் குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போக, மீனாவை தங்கம், செல்லம் என கொஞ்சுகிறார் விஜயா. இதைப்பார்த்து ஒட்டுமொத்த குடும்பத்தினருமே வாயடைத்துப் போகிறார்கள். விஜயா, டாக்டர் பட்டம் வாங்குவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார் என்பது வீட்டில் உள்ள யாருக்குமே தெரியாது. இவை அனைத்தையும் வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறார் விஜயா.

44
விஜயா ஆரம்பித்த அறக்கட்டளை

அதுமட்டுமின்றி விஜயா பவுண்டேஷன் என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளையையும் ஓபன் செய்கிறார் விஜயா. அந்த அறக்கட்டளை மூலம் தினமும் நிறைய ஏழை எளியவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து வருகிறார். அப்போது முத்து சாப்பிடுவதற்காக அந்த வரிசையில் அமர்ந்திருக்க, விஜயாவிடம் எமோஷனலாக சில விஷயங்களை பேசுகிறார். அவரின் பேச்சைக் கேட்டு விஜயா மிகவும் எமோஷனல் ஆகிறார். அவர்கள் அப்படி என்ன பேசினார்கள்? எதற்காக விஜயா எமோஷனல் ஆனார்? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories